ஸ்ரீ ஸ்வாமி சச்சுதண்ட்ஜி சரஸ்வதி எனும் குருவால் இந்த பர்தேஷ்வர் கோயில் கட்டப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. பர்பானி ஸ்தலத்திலேயே அமைந்துள்ள இது மஹாமண்டலேஷ்வர் சாதனாதர்மாஷ்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோயில் முழுவதும் வெண் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டு எட்டு அடி உயரத்தில் காட்சியளிக்கின்றது. இங்குள்ள கர்ப்பகிருகத்தில் சிவபெருமானின் விக்கிரகம் அருகில் அன்னபூரணி தேவியுடன் காட்சியளிக்கிறது. பிரம்மாண்டமான 4000 ச.மீ பரப்பளவில் இந்த முழுக் கோயிலும் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கம் 250 கிலோ எடையுள்ள பாதரசத்தால் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது போன்ற லிங்கங்களிலேயே அளவில் பெரியதாக இது புகழ் பெற்று அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications