பர்வனூவிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்சா தேவி கோயில், அப்பகுதியின் பிரபலமான மத மையங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலத்தை தேசிய நெடுஞ்சாலை 22 வழியாக எளிதில் அடையலாம்.இந்த கோவில் 1811 முதல் 1815 வரை உள்ள ஐந்து ஆண்டு காலகட்டத்தில் மனிமஜ்ராவின் மகாராஜா கோபால் சிங் என்பவரால் கட்டப்பட்டது.
இந்து மதத்தின் கடவுளான தேவி துர்காவின் ஒரு அவதாரமாக கருதப்படுகின்ற தேவி மன்சா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. மன்சா தேவியை வழிபடும் பக்தர்களுக்கு அவள் வேண்டும் வரத்தை தருவதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.