மாநிலத்தின் புகழ்பெற்ற பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் புல்வெளிகளால் நிறைந்துள்ள இப்பூங்காவின் மற்ற இடங்களில் மரங்களும், நீர்நிலைகளும் இருக்கின்றன. சியாங் நதியால் சூழப்பட்ட இவ்விடம் எழில் நிறைந்து காணப்படுகிறது.
190சதுர பரப்பளவில் அமைந்த இப்பூங்கா சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து வரும் புலம்பெயர் பறவைகளின் அழகுக்காக அறியப்படுகிறது. பறவைகளி கண்டுகளித்தல் சுற்றுலாப்பயணிகளுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் விருப்பமான பொழுதுபோக்காக இருக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தின் நுழைவாயிலாக அறியப்படும் பசிகாட்டில் இருந்து 13கிமீ தொலைவில் இப்பூங்கா அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications