சிறிய கிராமமான பான்ஜின் பசிகாட்டில் இருந்து 60கிமீ தொலைவில், கிழக்கு சியாங் மாவட்டத்தின் பாஞ்சின் மண்டலத்தில் அமைந்துள்ளது. சியாங் நதியும் சியோம் நதியும் சங்கமிக்கும் அழகிய இடத்தில் இவ்விடம் அமைந்துள்ளது.
பச்சைப் புல்வெளிகளும், பான்ஜின் கிராமத்தின் நீல நிற இயற்கை அழகும் அள்ளித்தரும் எழில் நிறைந்த காட்சிகள் மட்டுமல்லாது அங்கு கிடைக்கும் மருத்துவ குணமுள்ள மூலிகைகளுக்காகவும் இவ்வூர் அறியப்படுகிறது. விலங்கியல் ஆய்வாளர்கள் இக்கிராமத்தை வனவியல் பற்றி அறிந்துகொள்ள சிறந்த இடமாகக் கருதுகிறார்கள்.
இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகத் திகழும் இவ்விடம் என்னென்ன அழகுகளை ஒளித்து வைத்திருக்கிறது என்பது கண்டால் மட்டுமே புரியும்.



Click it and Unblock the Notifications