பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரன்முளா எனும் சிறிய கிராமத்தில், பம்பை நதிக் கரையில் அரன்முளா பார்த்தசாரதி கோயில் அமைந்திருகிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான பார்த்தசாரதியின் சிலை தன கையில் சுதர்ஷன் சக்கரத்துடன் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அதோடு இந்தக் கோயில் வட்டவடிவில் கேரள பாரம்பரிய கட்டிடக் கலையில் கட்டப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அலாதியானது.
அரன்முளா கிராமத்தில் ஓணம் திருவிழாவின் போது நடத்தப்படும் அரன்முளா வல்லம்கலி என்று அழைக்கப்படும் பாம்புப் படகுப் போட்டி இந்தியா முழுவதும் வெகுப்பிரபலம்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் மறக்காமல் வாங்கிச் செல்லும் உலகப் புகழ்பெற்ற அரன்முளா கண்ணாடி, அரன்முளா கிராமத்தின் குன்றாப் புகழுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.



Click it and Unblock the Notifications