பத்தனம்திட்டா நகரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமமான கடமநிட்டாவில் அமைந்திருக்கும் கடமநிட்டா தேவி கோயில் கேரளாவின் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகும்.
இந்தக் கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் படயணி எனும் சம்பிரதாய நடனத்தை காண ஒவ்வொரு கலா ரசிகர்களின் உள்ளமும் ஏங்கும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.
அப்போது கடமநிட்டா கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதோடு படயணி திருவிழா கேரளாவின் ஒரு சில பகவதி கோயில்களில் நடைபெற்று வந்தாலும், கடமநிட்டா கோயிலில் அந்த விழா நடத்தப்படும் விதம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடியது.



Click it and Unblock the Notifications