பத்தனம்திட்டா நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் குடமன் எனும் சிற்றூரில் குடமன் சிலந்தியம்பலம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சக்திபத்ரா பேரரசின் கடைசி அரசரால் கட்டப்பட்டு, மஹாலக்ஷ்மி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குடமன் நகரம் ஆஸ்சர்ய சூடாமணி எனும் புகழ்பெற்ற நாடகத்தை எழுதிய ஸ்ரீ சக்தி பத்ரனின் பிறந்த ஊராகும்.
குடமன் சிலந்தியம்பலம் கோயிலில் 'சிலந்திக்கிணறு' என்று அழைக்கப்படும் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றின் நீர் தீராத சரும வியாதிகளையும் தீர்த்து வைப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக இந்தக் கோயிலை தேடி தொலை தூர நகரங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications