ஏழாம் நூற்றாண்டில் விக்கிரமாதித்ய மன்னரில் இரண்டாவது மனைவியாகிய திரிலோக்யமஹாதேவியால் இந்த புராதனமான கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. பல்லவர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக விருபாக்ஷ கோயிலை கட்டுவித்தபின் இந்த கோயிலையும் அவர் நிர்மாணித்ததாக அறியப்படுகிறது.
வடிவமைப்பு, தோற்றம் போன்ற எல்லா அம்சங்களிலும் இது விருபாக்ஷ கோயிலை போன்றே காணப்படுகிறது. பட்டடக்கல் பகுதிக்கு வருகை தரும் எல்லா பயணிகளும் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய அம்சங்களுள் இந்த மல்லிகார்ஜுனா கோயிலும் ஒன்றாகும்.இந்த கோயிலில் ஒரு துணை சன்னதியோடு இணைந்த எதிர்கர்ப்பகிருகம், சபா மண்டபம் மற்றும் கருவறை, பிரகாரம் போன்றவை அமைந்துள்ளன. ஆதியில் மகிஷாசுரமர்த்தினி மற்றும் கணேஷ் சிலைகளைக்கொண்டிருந்த துணைசன்னதிகள் தற்சமயம் வெறுமையாக உள்ளன.
சபாமண்டப தூண்களில் புராணங்கள் இதிகாசங்களிலிருந்து காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள நந்தி மண்டபம் அக்காலத்திய அற்புதமான கட்டிடக்கலைக்கு ஒரு உன்னதமான உதாரணமாக விளங்குகிறது.
இதன் அடித்தள பீட அமைப்பில் காணப்படும் வெகு நுட்பமான சிற்ப வடிவமைப்புகளில் யானைகள், குதிரைகள் போன்ற மிருகங்களின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications