Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்டடக்கல் » ஈர்க்கும் இடங்கள் » பாபநாத கோயில்

பாபநாத கோயில், பட்டடக்கல்

20

விருபாக்‌ஷா கோயில் வளாகத்திற்கு தெற்கே முக்தேஸ்வரர் எனும் கடவுளுக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு குறிப்புகளிலிருந்து இது 740 ம் ஆண்டு கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

உள் மண்டப வாயிலுக்கு அருகிலேயே நந்தி சிலை மற்றும் வீரபத்ரர் சிலை காணப்படுகின்றன. மேலும் பயணிகள் இங்கு முக்ய மண்டபத்தினை தாங்கி நிற்கும் 16 பிரம்மாண்டமான தூண்களையும் பார்க்கலாம்.இங்குள்ள தூண்களும் குறுக்கு உத்தரங்களும் நுட்பமான சிற்பவேலைப்பாடுடன் காட்சியளிக்கின்றன. இவை ஆண் பெண் உருவங்களைக்கொண்ட மன்மத சிற்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர பக்தர்கள் இங்கு சிவன் மற்றும் பார்வதி சிற்பங்கள் அவர்களைச்சுற்றிலும் இசைக்கலைஞர்கள் சூழ அர்த்த மண்டபத்தின் உள்கூரையில் வடிக்கப் பட்டிருப்பதையும் காணலாம். மேலும் ராமாயண மஹாபாரத காவியங்களிலிருந்து பல காட்சிகள் இந்த கோயிலில் வடிக்கப்பட்டுள்ளன.இந்த கோயிலில் கூடம் மற்றும் மாட அமைப்புடன் ஒரு நுழைவு வாயில், ஒரு சபா மண்டபம், ஒரு அர்த்த மண்டபம் மற்று கருவறை போன்றவை காணப்படுகின்றன. மேலும் ஒரு வித்தியாசமான அம்சம் இங்கு நந்தி மண்டபம் இல்லை என்பதாகும்.

இருப்பினும் ஒரு அற்புதமான நந்தி சிற்பம் சபா மண்டபத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுக்காக இது பட்டடக்கல் ஸ்தலத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில்களுள் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu