ஔதா என்றழைக்கப்படும் இந்த கிராமம் பினாங்க்வான் நகரத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ தூரத்தில் நாகினா-ஹோதால் சாலையில் உள்ளது. புத்தர் மதுராவிலிருந்து சிரவஸ்தி வெரஞ்ஜா எனும் இடத்துக்கு பயணம் செய்தபோது இந்த இடத்திற்கு விஜயம் செய்ததாக கூறப்படுகிறது.
இங்கு வரலாற்று காலத்தை சேர்ந்த சாம்பல் வண்ணம் பூசப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், மண் பாண்டங்கள் மற்றும் புராதன காலத்தை சேர்ந்த தொல்லியல் சான்றுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுடுமண் உருண்டைகள் அல்லது பந்துகள் மற்றும் கண்ணாடி மணிகள், வளையல் போன்றவையும் இப்பகுதியில் கிடைத்துள்ளன.



Click it and Unblock the Notifications