பொன்முடியின் மலைக்குன்றுகளில் டிரெக்கிங் சென்று இயற்கை ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களை கண்டறியும் அனுபவம் உங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத பக்கங்களாய் நிலைத்திருக்கும்.
அதுவும் பொன்முடியின் இதமான வெப்பநிலை காரணமாக ஆண்டின் எந்த பருவத்திலும் நீங்கள் டிரெக்கிங் செல்லலாம். எனினும் மழைக் காலங்களில் பாறைகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால் அந்த பருவத்தில் டிரெக்கிங் செல்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.
மேலும் டிரெக்கிங் செல்ல விரும்பவர்கள் பொன்முடி வன சம்ரக்ஷண சமிதி எனும் அமைப்பு மூலம் டிரெக்கிங் வழிகாட்டியின் உதவியை பெற முடியும்.
பொன்முடி மலைப்பகுதிக்கு டிரெக்கிங் பிரியர்கள் அடிக்கடி வந்து செல்வதற்கு முக்கிய காரணம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் அகஸ்த்தியர்கூடம் என்ற உயரமான சிகரமே ஆகும்.
இந்த ஆபத்தான சிகரத்தில் டிரெக்கிங் மற்றும் ஹைக்கிங் சென்ற அனுபவத்தை நீங்கள் எப்போது நினைத்துப் பார்த்தாலும் ஒரு வித சிலிர்ப்பை உங்களுக்குள் உணர்வீர்கள். ஆனால் நீங்கள் இந்த பகுதியை சுற்றிப் பார்பதற்கு வனத்துறையின் அனுமதி பெறுவது முக்கியம்.



Click it and Unblock the Notifications