Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூஞ்ச் » ஈர்க்கும் இடங்கள் » சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப்

சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப், பூஞ்ச்

27

சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப், செயிண்ட் இல்லாஹி பக்ஷ் சாஹிப் என அறியப்படும் ஒரு பிரபலமான சூஃபி செயிண்டின் கோவிலாக‌ உள்ளது. இது பூஞ்சில் இருந்து 37 கி.மீ. தொலைவில் பட்டல்கோட் கிராமத்தில் அமைந்துள்ளது. 

நைன் சுக் மற்றும் நந்தி ஷூல் என்ற இரண்டு ஊற்றுகள் சங்கமிக்கும் இடத்தில்  பிர் பஞ்சால் மலைத்தொடர் மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமம்,பட்டல்கோட்.

இந்த இடத்தை சுற்றி அடர்ந்த‌ காடுகள், அழகிய மலைகள், மக்காச்சோள வயல்கள் மற்றும் நீர் நிலைகள் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

1948 இல் இங்கு வந்த சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப் , தனது வாழ்நாள் முழுவதும் இங்கு வாழ்ந்து , மே 16 , 1976ல் இறந்தார். அவரது மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் , அவர் விரைவில் இறந்து போவார் என்று அவரது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார்.

அவரது இறப்பிற்கு முன் அவரே தன்னை புதைப்பதற்கான‌ இடத்தையும்  தேர்வு செய்தார். மூன்று நாட்கள் பொது பார்வையில் அவரது உடலை வெளிப்படுத்தக் கோரினார். ஒரு சூஃபி துறவியாக, ஒரு போதகராக, அவர் தொடர்ந்து சகோதரத்துவம், சமாதானம் மற்றும் அன்பைப்  பரப்பும் வேலையை செய்துவந்தார்.

ஒவ்வொரு ஆண்டும்,மே மாதம் செயிண்ட் சாஹிப் நினைவாக நடைபெறும் உர்ஸில் பெரிய எண்ணிக்கையில் பக்தர்கள் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகள் இன்றி பங்கேற்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri