பூவார் கிராமம் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதற்கு மூல முதல் காரணம் பூவார் பீச்தான். இங்கு முதல் முறையாக வரும் பயணிகள் பரபரப்பு மிகுந்த நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் பேரமைதியை வெகுவாக விரும்புவார்கள்.
பூவார் கடற்கரையையும், கோவளம் கடற்கரையையும் நெய்யார் நதியின் முகத்துவாரம் பிரிக்கிறது. இந்த முகத்துவாரத்தில் கடல், ஏரி மற்றும் நதி என்று மூன்றின் நீரும் ஒன்றாக கலக்கும் அபூர்வ காட்சியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.
பூவார் பீச்சில் நிறைய ரிசார்ட்டுகள் அமைந்திருக்கின்றன. எனவே அலுத்துப் போன உங்கள் இயந்திர வாழ்க்கைக்கு மிகச் சிறந்த அருமருந்தாக திகழும் பூவார் கிராமத்துக்கு நீங்கள் வரும் போது உங்கள் தேவைக்கேற்றபடி சிறந்த தங்குமிடங்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.
மேலும் ஆயுர்வேத சிகிச்சை, ஷாப்பிங், உணவு வகைகள் போன்றவற்றுக்காக பூவார் பீச் பயணிகளிடையே மிகப்பிரபலம். ஆனால் இங்கு கடல் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுவதால் நீங்கள் உங்கள் விருப்பப்படி கடலில் நீந்துவது ஆபத்தில் முடியலாம்.



Click it and Unblock the Notifications