பழவேற்காடு பகுதியில் சில ஆண்டுகள் ஆட்சி செய்த டச்சு நாட்டவரின் பெருமையை பறைசாற்றும் வகையிலே இங்கு அமைந்திருக்கும் பழமையான தேவாலயம் விளங்குகிறது.
17வது மற்றும் 18வது நூற்றாண்டுகளில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக பழவேற்காடு இருந்து வந்தது. இங்கு இருக்கும் டச்சு தேவாலயம் மற்றும் அதையொட்டி இருக்கும் கல்லறைகள் ஆகியவை அதனுடைய பழமைக்காக மட்டுமல்லாமல் பெருமை வாய்ந்த கட்டிடக்கலை வடிவமைப்புகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாக இருக்கிறது.
இந்த தேவாலயம் பலமுறை திரும்பத் திரும்ப புணரமைப்பு செய்யப்பட்டிருந்தாலும், இன்னமும் அழிவுறும் நிலையிலேயே உள்ளது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இங்கிருக்கும் கல்லறையில் 400 ஆண்டுகளுக்கும் முந்தைய கல்லறைகள் கூட உள்ளது.
டச்சு நாட்டவரின் ஆதிக்கம் உச்சத்திலிருந்த நாட்களில், 1657-ம் ஆண்டில் இந்த கோட்டை கட்டப்பட்டது. டச்சு ஆதிக்க காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலையின் வசீகர அம்சங்களாக நிமிர்ந்து நிற்கும் இந்த தேவாலயமும், கல்லறை தோட்டமும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை இன்னமும் தன்னகத்தே கவர்ந்திழுக்கின்றன.



Click it and Unblock the Notifications