ஆன்மீக குரு ரஜனீஷ் ஓஷோவால் கட்டப்பட்ட இந்த ஆசிரம்ம் கொரோகான் பூங்காவில் அமைந்துள்ளது. 32 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக காணப்படும் இந்த ஆசிரம்ம் ஓஷொவின் தத்துவங்கள் மற்றும் போதனைகளில் ஆர்வம் கொண்ட பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.
மனதையும் உடலையும் சுத்திகரிக்கும் வகையில் பலவகையான பயிற்சிகள் இங்கு நடத்தப் படுகின்றன. ஓஷோ நடராஜ தியானம், ஓஷோ டைனமிக் தியானம், ஓஷோ குண்டலினி தியானம் போன்றவை இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.
பகல் தியானத்தின்போது கருஞ்சிவப்பு உடையும், மாலை நேர தியானங்களின் போது வெண்ணிற ஆடையும் இங்கு அணியப்படுகிறது. வருடம் முழுக்கவே திறந்திருந்தாலும் இந்த ஆசிரமம் பார்வையாளர்களுக்கு தங்கும் வசதிகளை தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நுல்லா பூங்கா எனும் அழகான பூங்கா ஒன்றும் இங்கு ஆசிரமத்துக்கருகில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications