ராம பிரானின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தூததாரி மடாலயம் ராய்பூர் நகரத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில் ஜைத்சிங் மன்னரால் கட்டப்பட்ட இந்த மடாலயம் இந்த சுற்று வட்டாரத்தில் மிகப்பிரசித்தமான ஆன்மீக மையமாக அறியப்படுகிறது. இது மஹாராஜ்பந்த் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த மடாலயத்துக்கு அருகிலேயே ஒரு கோயில் ஒன்றும் உள்ளது.
இந்த மடலாயத்தின் பெயர் குறித்த ஒரு சுவாரசியமான பின்னணியையும் உண்டு. அதாவது பாலை மட்டுமே உணவாக கொண்டு வாழ்ந்த ஸ்வாம் பல்பத்ரா தாஸ் என்பவரின் நினைவாக இது ‘தூத் (பால்) தாரி’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலில் காணப்படும் அழகிய சுவரோவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. சட்டிஸ்கருக்கு வருகை தரும் பயணிகள் ராய்பூரில் உள்ள இந்த தூததாரி மடாலயத்திற்கு மறக்காமல் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications