ஷாப்பிங் பிரியர்களை கவரும் ஏராளமான சுவாரசியங்கள் இந்த ராய்பூர் நகரத்தில் நிரம்பியுள்ளன. இந்த நகரின் தெருக்களில் இருபுறமும் கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் கைத்தறி துணி வகைகள், மூங்கில் மற்றும் மரத்தால் ஆன கைவினைப்பொருட்கள், உடைகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கப்படுகின்றன.
ராய்பூர் கைத்தறிப்புடவைகள் பெண்கள் பெரிதும் விரும்பும் புடவை வகைகளாகும். தோகிதா கோசா கைத்தறி மையம் மற்றும் பர்லோட்டா எண்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு இடங்களில் உள்ளூர் கைத்தறிப்புடவைகளை பயணிகள் வாங்கலாம்.
இவை தவிர ஷபரி சட்டிஸ்கர் ஸ்டேட் எம்போரியம் எனும் வளாகத்தில் பல்வேறு கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மாக்னெட்டோ-தி மால், கலர்ஸ் மால், சிட்டி மால்36, ஆர் கே மால், சட்டிஸ்கர் சிட்டி சென்டர் மால், மஹா கோஷல் ஆர்ட் கேலரி, அம்புஜா சிட்டி சென்டர் மால் மற்றும் டிரஷர் ஐலேண்ட் போன்ற இதர வளாகங்களும் ராய்பூர் நகரில் ஷாப்பிங் பிரியர்களுக்காக காத்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications