விவேகானந்தா சரோவர் என்று அழைக்கப்படும் இந்த ஏரி ராய்பூர் நகரத்தில் உள்ள மிகப்பழமையான ஏரியாகும். இந்த நகரம் எந்த அளவுக்கு பழமையானதோ அதே அளவுக்கு இந்த ஏரியும் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிற்து. ராய்பூர் பகுதியின் மிகப்பெரிய ஏரி என்ற அடையாளத்தையும் இது கொண்டிருக்கிறது.
37அடி உயரமுள்ள விவேகானந்தா சிலை ஒன்று இந்த ஏரி ஸ்தலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான இந்த சிலை லிம்கா கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.
ஏரியிலிருந்து 2.7 கி.மீ தூரத்தில் ஸ்வாமி விவேகானந்தா ஆஷ்ரம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இது விவேகானந்தரின் கொள்கைகளை கற்பித்து பரப்பி வருகிறது.



Click it and Unblock the Notifications