ராஜோவ்ரி மாவட்டத்திலுள்ள குஜ்ஜார் மன்டி சௌக்கில் உள்ள பாலிடான் பவன் ஒரு பிரபலமான சுற்றுலாதலமாகும். 1947-48-ம் ஆண்டு போரில் இறந்த குடிமக்களின் நினைவிடமாகவும் இந்த போர் நினைவுச் சின்னம் கருதப்படுகிறது.
1947-ம் ஆண்டு, தீபத்தின் பண்டிகையாக இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளின் போது இங்கு போர் தொடங்கியது. இந்த பண்டிகை தின இரவில், இந்திய இராணுவம் இல்லாத இந்நகரத்தை பாகிஸ்தான் படைகள் எளிதில் கைப்பற்றி விட்டன.
13 ஏப்ரல் 1948-ல் பஞ்சாப்பின் பைசாகி பண்டிகையின் போது, இந்திய இராணுவம் இந்நகரத்தை மீண்டும் கைப்பற்றியது. இந்த போரில் இறந்த தியாகிகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த போர் நினைவுச்சின்னத்திற்கு 'தியாகங்களின் நினைவிடம்' என்று பொருள் தரும் ‘பாலிடான் பவன்' என்ற பெயர் சரியாக சூட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications