உயர்ந்த மலைச்சிகரங்கள் மற்றும் அடர்த்தியான கானகங்களுக்கு மத்தியில் தெஹ்ரா கி காலி ராஜோவ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலா (Eco Tourism) பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தெஹ்ரா கி காலி, பீர் பாஞ்சால் மலைத்தொடரில் 6600 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
தெஹ்ரா கி காலி உயரமான இடங்களில் சங்கிலி தொடராக அமைந்துள்ள ஏரிகளுக்காக மிகவும் பிரபலமான இடமாகும். இந்த மலையின் உச்சிக்கு வருபவர்கள், பீகான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஓரறை விடுதியொன்றை யும் காண்பார்கள்.
இந்த இடம் குளிர்காலத்தில் மிகவும் அதிகமான பனிப்பொழிவினை பெறுவதால், இந்த சீசனில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது நல்லதன்று.



Click it and Unblock the Notifications