ராஜோவ்ரி நகரத்திலுள்ள ஜாங்கர் கிராமத்திலுள்ள புகழ் பெற்ற மதத்தலம் தேரா பாபா பீராம் ஷா என்பதாகும். சீக்கியர்களின் 6வது குருவான குரு ஹர்கோபிந்த் சிங்-ன் முதன்மையான சீடர்களில் ஒருவராக இருந்த பாபா பீராம் ஷா ஜி தத் என்பவரின் பெயரையே இவ்விடத்திற்கு வைத்துள்ளார்கள்.
தேரா பாபா பீராம் ஷாவின் தோற்றம் 17-ம் நூற்றாண்டின் புராணக்கதைகளுடன் தொடர்புள்ளது. இந்த கதைப்படி குரு ஹர்கோபிந்த் சிங், ஜம்முவில் சீக்கிய மதத்தை பரப்புவதற்காக பஞ்சாப்பில் இருந்து ஒரு துறவியை அனுப்ப நினைத்தார்.
பிற்காலத்தில், ஜாங்கர் கிராமத்தில் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கும் தேராவை எழுப்பிய பாபா பீராம்சிங் அந்த துறவிகளில் ஒருவராவார். பஞ்சாப்பின் அறுவடை திருநாளான பைசாகி பண்டிகைக்கு முன்னர் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த புனிதத்தலத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கூடி வருவார்கள்.



Click it and Unblock the Notifications