ஜாங்கரில் அமைந்துள்ள உஸ்மான் நினைவிடம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த பகுதி மக்களால் ஜாங்கர் பகுதியை விடுதலை செய்தவராக கருதப்படும் பிரிகேடியர் முகம்மது உஸ்மான் என்பவரின் நினைவாக இவ்விடத்தில் ஒரு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.
1948-ம் ஆண்டு பாகிஸ்தானியர்களின் தாக்குதலிலிருந்து இந்த பகுதியை காப்பாற்ற முயன்ற போது பிரிகேடியர் முகம்மது உஸ்மான் தாக்குதலுக்குள்ளாகி இறந்து விட்டார்.
ஜாங்கர் பகுதியிலுள்ள காலாட்படைக்கு உஸ்மான் நினைவிடத்தைப் பரமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 3-ம் நாளில், முகம்மது உஸ்மானுக்கும், ஜாங்கர் பகுதியைக் காத்து நின்ற போது உயிரிழந்த சாதாரண மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். இந்த அஞ்சலி செலுத்தும் தினம் 'ஜாங்கர் தினம்' என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications