ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலுக்கு வெளியில் உள்ள முதல் தீர்த்தம் அக்னி தீர்த்தமாகும். பிற தீர்த்தங்கள் குளங்களைப் போலவும், கோவிலிற்குள்ளுமாக இருக்கும் வேளையில் இந்த தனித்தன்மை வாய்ந்த தீர்த்தம் கடலின் ஒரு பக்கத்தில் உள்ளது.
ஸ்ரீ இராமர் இராவணனைக் கொன்ற பின்னர் கடலின் இந்த பகுதியில் குளித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த குளத்தில் குளிக்கும் வேளையில் தான் இராமர், சிவபெருமானின் ஆசிகளை வேண்டினார் என்றும் நம்பப்படுகிறது.
ஒரு பிராமணரை கொன்றதற்காக தனக்கு விமோசனம் தரவும் இராமர் இங்கு வேண்டியுள்ளார். இந்த தீர்த்தத்தில் குளிப்பதால் பூமியில் செய்த பாவங்கள் களையப்படும் என்று நம்பப்படுகிறது.
இராமேஸ்வரத்திற்கான சுற்றுப்பயணம் இந்த அக்னி தீர்த்தத்தில் குளித்த பின்னர் தான் தொடங்கும், எனவே மத ரீதியாகவும் சுற்றுலா வரும் அனைவரும் இந்த தீர்த்தத்தில் நீராடி செல்கின்றனர்.
எப்படியாயினும், இந்த குளத்தின் சுகாதார தரத்தைப் பற்றி அவ்வப்போது சில கேள்விகளும் எழுந்ததுண்டு. மத முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்த்தத்தை கவனமாக பராமரித்திட வேண்டும் என புனித சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.



Click it and Unblock the Notifications