சத்ரி எனும் இந்த ஸ்தலம் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் முக்கியமான வழிபாட்டுத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. முற்காலத்தில் இது ‘மேவாரின் மார்வார் வாசல்’ என்றும் அறியப்பட்டுள்ளது.
ஜைன சமூகத்தினரின் முக்கியமான ஆன்மீகத் திருத்தலமாக இது புகழ்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரணக்பூர் கோயில் மற்றும் பரசுராம் மஹாதேவ் மந்திர் ஆகிய கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இது ஒரு கேந்திரமாகவும் திகழ்கிறது.
இங்கு வராஹவதார் கோயில் மற்றும் சிந்தாமணி பர்ஷ்வநாதர் கோயில் ஆகியவற்றுடன் குடாபக்ஷ் பாபா தர்க்கா எனும் மசூதியும் முக்கியமான ஆன்மீக திருத்தலமாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications