ராணிக்கேத் பகுதியில் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றம் ஒரு முக்கியமான சாகச பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1869 மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இடம் மலையேற்றத்திற்கு ஏற்ற புவியியல் அமைப்பை கொண்டிருக்கிறது.
ராணிக்கேத்திலிருந்து ககஸ் எனும் இடம் நோக்கி செல்லும் மலைப்பாதையில் பயணிகள் மலையேற்றம் செய்யலாம். இங்கு துவாரகாத் எனும் இடத்தில் உள்ள கத்யூரி ராஜ வம்ச காலத்தைச்சேர்ந்த புராதன சிற்பங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
மேலும், இங்குள்ள ஒரு பழமையான துர்க்கா கோயிலில் 1181ம் வருடத்தை சேர்ந்த செப்பேடு ஒன்றையும் காணலாம். மற்றொரு மலையேற்றப்பாதை ராணிக்கேத்திலிருந்து கத்புரியா, மஜ்காலி மற்றும் காளிகா மலைகள் வழியாக சிதல்கேத் வரை செல்கிறது.
இப்பகுதியில் இருப்பதிலேயே வெகு சிறப்பான மலையேற்றப்பாதை ராணிக்கேத் பகுதியில் துவங்கி 75கி.மீ நீண்டு கௌசனி எனும் இடம் வரை சென்று முடிகிறது.
செழுமையாக வனப்பகுதி மற்றும் ரம்மியமான பழத்தோட்டங்கள் வழியாக மலையேற்றம் செய்வதற்கான வாய்ப்பை பயணிகளுக்கு ராணிக்கேத் சுற்றுலாத்தலம் வழங்குகிறது.



Click it and Unblock the Notifications