சக்கும்பரி பகுதியில் ஒரு முக்கிய புனிதத் தலமாக நவ்கஜா பீர் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 73-க்கு அருகில் அமைந்திருக்கும் இந்த புனிதத் தலம் இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக அறியப்படுகிறது.
இந்த இடத்தில் அமையப்பெற்றிருக்கும் 26 அடி நீள மசார் ஒன்றை பார்ப்பதற்கு சமய பாகுபாடின்றி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதும் வித்தியாசமான அளவில் தோன்றும்.
அதோடு இந்த நவ்கஜா பீர், புராணங்களோடும் மற்றும் பல முனிவர்களோடும் தொடர்புடையது. இந்த பீர் கட்டப்படும் போது மனிதர்களின் சராசரி உயரம் 26 அடியாக இருந்தது என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு.
இவ்விடத்திற்கு பல அரசியல்வாதிகள், பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் வந்து தங்கள் வேண்டுதல்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications