குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சேர்வராயன் மலையடிவாரத்தில், சுமார் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து, பின் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் பூங்காவாக மாற்றப்பட்டது.
இப்பூங்காவில், புள்ளி மான்கள், வெள்ளை மயில்கள், தொப்பித் தலைக் குரங்குகள், சாம்பார் மான்கள், சாம்பல் நிற நாரைகள், சின்னக் கொக்குகள், சாம்பல் நிறக் கொக்குகள், சேற்று முதலைகள், ப்ளம் தலை கிளிகள், நட்சத்திர ஆமைகள், இளஞ்சிவப்பு வட்டங்கள் கொண்ட கிளிகள், மஞ்சள் கால்களைக் கொண்ட பச்சை புறாக்கள் மற்றும் 58 வயதான ஒரு யானை ஆகியன இங்கு வாழும் சில அரிய உயிரினங்களாகும்.
இவ்வளாகத்தில், ஒரு குழந்தைகள் பூங்காவும் உள்ளது. இவ்விடம், இயற்கையான சூழலில் பொழுதைக் கழிப்பதற்கு இனிய இடமாகும்.