மாயம்மா ஆசிரமத்தில் மாயம்மா தேவியின் ஜீவசமாதி உள்ளது. தேவி மாயம்மா கன்னியாகுமரியிலிருந்து இங்கு வந்து தங்கிய பெண் துறவி ஆவார். எழில் கொஞ்சும் ஏற்காடு மலையின் எல்லையோரத்தில் வாழ்ந்து வந்த இவர், 1992 –ஆம் ஆண்டு, இவ்வாசிரமம் தற்போது அமைந்துள்ள இடத்தில், தன் பூதவுடலை விட்டு நீங்கி, தெய்வ நிலை எய்தினார்.
ஒவ்வொரு வருடமும், இவர் உயிர் நீத்த நாளான பிப்ரவரி 9 அன்று கொண்டாடப்படும் சமாதி நாளன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குழுமுகின்றனர். இச்சமாதியை, தேவியின் சீடராகிய ஸ்ரீ ராஜேந்திரன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இவ்வாசிரமத்தின் அமைதியான சூழல், பக்தர்கள் தியானம் செய்வதற்கும், தேவியின் அருளை வேண்டி வழிபடுவதற்கும் ஏற்றதாக உள்ளது. நகர வாழ்க்கையின் பரபரப்புக்களிலிருந்து தற்காலிகமாக விடுபட நினைக்கும் சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் இவ்விடம் சிறப்பாக பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications