சேலம் விமான நிலையம், சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள கமலபுரம் என்ற இடத்தில், நகரத்தை விட்டு 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆனால் தற்போது அங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுவதில்லை. சுமார் 135 கி..மீ. தொலைவில் அமைந்த திருச்சிராப்பள்ளி மற்றும் 150 கி.மீ. தொலைவில் அமைந்த கோயம்புத்தூர் விமான நிலையங்கள் தாம் சேலத்திற்கு அருகில் உள்ள விமான நிலையங்களாகும்.