சான்வோர்டேம் நகரம் மார்கோ ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாலும், கோவாவின் புகழ்பெற்ற கோல்வா மற்றும் பெநொவ்லிம் கடற்கரைகளுக்கு வெகு அருகாமையில் இருப்பதாலும் பயணிகள் அதிகமாக கூடும் சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.
மேலும் 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டுகளில் கண்டெடுக்கப்பட்ட ரிவோனா குகைகள் சான்வோர்டேம் நகருக்கு வெகு அருகிலேயே உள்ளது. இந்த குகைகள் புத்த மரபின் பெருமைகளை உலகுக்கு உணர்த்தும் உன்னத சாட்சிகளாக விளங்கி வருகின்றன. இதன் காரணமாகவே இந்த குகைகளை தேடி ஏராளமான வரலாற்று ஆர்வலர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
சான்வோர்டேம் நகரம் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணற்ற தெருவோர கடைகளால் நிரம்பி வழியும். அப்போது நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை மிகவும் குறைந்த விலையில் வாங்கிச் செல்லலாம்.



Click it and Unblock the Notifications