சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் நிறைந்தவர்களுக்கும், இயற்கை அழகினை வித்தியாசமாக ரசிக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கும், சாபுதாராவின் எழிலைக் கண்டு இன்புற விரும்புபவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுதான், வைத்தி ரிசார்ட் அமைத்துள்ள ரோப்வே கேபிள் கார் சர்வீஸ்.
இந்த ரோப் கார் வழியாக 10 முதல் 15 நிமிட நேரம் வரை பயணம் செய்து சாபுதாராவின் பசுமை ததும்பும் பள்ளத்தாக்கின் இயற்கை அழகை உயரத்திலிருந்து கண்டு களிக்கலாம். பத்து பயணிகள் சேர்ந்தால்தான் இக்கேபிள் கார் சவாரி இயக்கப்படும்.