Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சராஹன் » ஈர்க்கும் இடங்கள் » பீமகாளி கோயில்

பீமகாளி கோயில், சராஹன்

17

சராஹனில் உள்ள பீமகாளி கோயில், இந்துக்களின் முக்கிய புனிதத்தலமாக உள்ளது. தேவி பீமகாளிக்காக அர்பணிக்கப்பட்ட இந்த கோயில், குறைந்தது 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. கோவிலின் கட்டிடக்கலை, இந்திய மற்றும் புத்த கட்டிடக்கலை பாணியை கலந்த ஒரு தனிப்பட்ட கலவையாகும்.

மிகப்பழமையான இக்கோயில், தற்போது மூடப்பட்டுள்ளது. காலை, மாலை, தீபாராதனைக்காக மட்டுமே திறந்திருக்கும். ஒரு புதிய கோவில் 1943 இல் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டது.

புனிதமான தேவி பீமகாளியின் சிலை ஒரு கன்னியாகவும், ஒரு பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் மேலும் இரு கோயில்கள் உள்ளன. அவை முறையே ரகுநாதர் மற்றும் பைரோனிலுள்ள நரசிம்மருக்காக அர்ப்பணிக்கப்பட்டவை.

பீமகாளி கோயில், இந்தியாவின் மிக முக்கிய சக்திபீடங்களுள் ஒன்றாகும். இதனால் இக்கோயில் மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது. மத நம்பிக்கையின் படி சிவனுடன் காளிதேவி நடனப்போட்டியிடும் போது, சிவனின் கோபத்துக்குள்ளாகி, காளியின் கோபாவேச நடனத்தால், அவளது உடல் 61 பகுதிகளாக கிழிந்து வீழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

அவ்வாறு கிழிக்கப்பட்ட உடலின், காதுப்பகுதி விழுந்த இடமே இவ்விடமாக கருதப்படுகிறது. இன்னொரு புராணக்கதைப்படி பிரம்மகிரி முனிவருக்காக காளிதேவி மரப்பலகையில் தோன்றியதாக கூறப்படுகிறது. வருடாவருடம் தசரா பண்டிகை இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue