பீமகாளி கோயில் வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள பறவைகள் பூங்கா, ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக இங்கு விளங்குகிறது. மயில் போன்ற ஒரு வகை கோழியின் இனப்பெருக்க மையத்தையும், இவ்விடத்தை தாயகமாக கொண்ட மோனல் என்ற பறவை இனத்தையும் காணலாம்.
இந்த பறவையினங்கள் தற்போது வேட்டையாடுதலால் அச்சுறுத்தப்படுகிறது. குறிப்பாக ஆண் மோனல் பறவைகள் தங்களது அற்புதத் தோகைக்காக ஆபத்தை எதிர்கொள்கின்றன.
1982-ஆம் ஆண்டு இப்பறவைகளை இறகுகளுக்காக கொல்வதற்குத் தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டது. அதுவரை அதன் கேடயம் போன்ற இறகுகள் தொப்பிகளுக்கு ஆபரணமாக பயன்படுத்தப்பட்டது.



Click it and Unblock the Notifications