Search
  • Follow NativePlanet
Share

சரன் - சந்தைகளின் கதைகள்!

13

பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் ஒன்றான சரன், சுற்றுலாப் பயணிகளால் அதிகமாக வருகை தரப்படும் மாவட்டமாகும். மிகப்பெரிய கோட்டமான சரனின் ஒரு பகுதியாக விளங்கும் சப்ரா தான் சரனின் உறைவிடமாக உள்ளது.

ஆன்மீகம், பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புற கலைகளை கொண்ட மனித வாழ்வுகள் நிறைந்ததாக விளங்குகிறது சரனின் சுற்றுலா. பீகாரின் பாரம்பரிய கலையின் பிரதிபலிப்பாக விளங்குகிறது சரன். இங்கு வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சரன் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சரன் சுற்றுலா இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரிய மேடையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. அதனால் இங்கு வரும் சுற்றலாப் பயணிகள் வரலாறு, சமயம் மற்றும் தொல்பொருள் தலங்கள் என பல விஷயங்களை ஆராய்ந்து மகிழலாம்.

ஆமி, கௌதம் ஆஸ்தன், சில்ஹௌரி, தோர்த் ஆஷ்ரம், சிரந்த் மற்றும் ஹாசன்புரா போன்றவைகள் இங்கிருக்கும் சில தொல்பொருள் தலங்களாகும். சரனில் அதிகமாக காணப்படுவது காளி மற்றும் சிவன் கோவில்கள் தான்.

சரனில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய இடம் சோனேபூர். இங்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நவம்பர் மாதத்தில் கால்நடை சந்தைகள் நடத்தப்படும். இதனை காண உலகத்தின் பல மூலைகளில் இருந்தும் மக்கள் வருவார்கள்.

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பிலும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது சரன். இங்கு நடக்கும் சந்தைகளும் பாரம்பரிய கலை நிகழ்சிகளும் சரன் சுற்றுலாவிற்கு புகழ் சேர்க்கும் வண்ணம் உள்ளது.

சரன் வருவதற்கு சிறந்த காலம்

ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை இங்கு பருவக்காலம் இனிமையாக இருப்பதால் இக்காலத்தில் இங்கு வருவதே உகந்த நேரமாக இருக்கும்.

சரனை அடைவது எப்படி?

அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் சரனின் உள்ளூர் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் பீகார் அரசாங்கம் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

சரன் சிறப்பு

சரன் வானிலை

சிறந்த காலநிலை சரன்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சரன்

  • சாலை வழியாக
    முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் சரனை பீகாரின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வர சீரான இடைவேளையில் பேருந்து வசதிகளும் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    வடகிழக்கு இரயில் சந்திப்புக்கு பெரும்பாலான சேவையை அளிக்கிறது இங்குள்ள சப்ரா சந்திப்பு. சரனுக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் இங்கிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள டியோகர்ரில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சரனில் இருந்து 174 கி.மீ. தொலைவில் கயாவில் அமைந்துள்ள கயா சர்வதேச விமான நிலையமும் 164 கி.மீ. தொலைவில் ராஞ்சியில் அமைந்துள்ள விமான நிலையமும் தான் இதற்கு அருகில் இருக்கும் இரண்டு விமான நிலையங்களாகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu