சதாரா நகரத்திலிருந்து சஜ்ஜன்காட் கோட்டை 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பத்தாம் நூற்றாண்டை ஒட்டி கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை ஷீ சமார்த்த ராம்தாஸ் ஸ்வாமிகள் சமாதி அடைந்த இடமாகவும் அறியப்படுகிறது.
இந்த யோகி சிவாஜி மஹாராஜாவின் குரு ஆவார். இந்த கோட்டை முற்காலத்தில் ஆஸ்வாலயங்காட் அல்லது ஆஸ்வால்காட் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
312 மீட்டர் உயரமுள்ள இந்த கோட்டையானது 1525 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதற்கு அருகாமையிலேயே இரண்டு ஏரிகளும் காணப்படுகின்றன. ராமநவமி பண்டிகையின் போது இந்த கோட்டைப்பகுதி முழுவதும் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications