ராஜஸ்தானின் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் உள்ள இந்த மண்டாவா நகரம் ஷேக்ஹாவதி பிரதேசத்தில் மையத்தில் உள்ளது. ஜெய்ப்பூரிலிருந்து 168 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோட்டை நகரம் சிறந்த சாலை இணைப்புகளைப் பெற்றுள்ளது. இங்குள்ள கோட்டைகள் மற்றும் ஹவேலிகளுக்கு இந்த நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.
‘கேஸில் மண்டாவா’ எனப்படும் மண்டாவா கோட்டை 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கோட்டையாகும். கிருஷ்ண பகவான் பசுமந்தையுடன் காட்சியளிக்கும் வண்ணம் தீட்டப்பட்ட அலங்கார தோரணவாயிலை இது கொண்டுள்ளது.
ஷர்துல் சிங் என்பவரின் மகனான தாகுர் நவால் சிங் என்பவரால் 1812வது விக்ரம் சம்வாத் வருடத்தில் (கி.பி 1755) இது கட்டப்பட்டுள்ளது. வரலாற்றுகால இந்தியக் கட்டிடக்கலை பாணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இதில் பல அற்புதமான சுவரோவியங்கள் நிரம்பியுள்ளன.
ஸ்ரீகிருஷ்ணர் ஓவியங்கள் மற்றும் நுட்பமான குடைவு வேலைப்பாடுகள், பிரமிக்க வைக்கும் கண்ணாடி அலங்கார வேலைப்பாடுகள் என்று இந்த கோட்டை முழுதுமே கலையம்சங்கள் நிரம்பி வழிகின்றன. இங்குள்ள தர்பார் மண்டபத்தில் புராதனமான பொருட்களும் ஓவியங்களும் அதன் கம்பீரத்தை மேலும் கூட்டுகின்றன.
‘கேஸில் மண்டாவா’ தற்சமயம் ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டு மண்டாவா ராஜகுடும்பத்தாரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஹோட்டலில் ஸ்டேண்டர்டு, டீலக்ஸ், லக்ஸூரி சூட் மற்றும் ராயல் சூட் போன்ற பலவகைப்பட்ட 70 அறைகள் உள்ளன.
உள்ளூர் உணவுவகைகளோடு சர்வதேச உணவுவகைகளியும் பரிமாறும் ஒரு உணவகமும் (மல்ட்டி குஸீன் ரெஸ்ட்டாரெண்ட்) இங்கு உள்ளது. இதில் விருந்தினர்களுக்காக 24 மணி நேர ரூம் சர்வீஸ், டிராவல் டெஸ்க், ஃபாரெக்ஸ், ஸ்விம்மிங் பூல் (3கி.மீ தூரத்தில் டெசர்ட் ரிசார்ட் ஸ்தலத்தில் உள்ளது), கலை நிகழ்ச்சிகள், தீம் டின்னர், குதிரை சஃபாரி, ஒட்டக சஃபாரி மற்றும் கிராம சஃபாரி போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றன.



Click it and Unblock the Notifications