துண்ட்லோட் எனும் இந்த சிறிய நகரம் ராஜஸ்தானின் ஷேக்ஹாவதி பகுதியில் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பல ஹவேலிகள் மற்றும் மாளிகைகளுக்கு இந்நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.
மேலும் இந்நகரின் பிரதான சுற்றுலா அம்சமாக துண்ட்லோட் கோட்டை புகழ் பெற்றுள்ளது. இது 16ம் நூற்றாண்டில் ரவால் வம்ச மன்னரால் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் துண்ட்லோட் கோட்டை ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
ஜகதியா மற்றும் கோயங்கா ஹவேலி, சத்யநாராயணா கோயில், சொக்கணி, திவான் இ காஸ், லாடியா மற்று சரஃப் ஹவேலி ஆகியவை இந்நகரிலுள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications