ராஜஸ்தானின் ஷேக்ஹாவதி பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது. அழகாக வண்ணம் பூசப்பட்ட பல ஹவேலிகளுக்கு இந்த நகரம் பிரசித்தி பெற்றுள்ளது. 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கேத்ரி மஹால், பிஹார்ஜி கோயில் மற்றும் மெர்தானி பாவ்ரி ஆகியவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
இங்குள்ள சேத் ஈஷ்வர்தாஸ் மோஹன் தாஸ் மோடி ஹவேலி மாளிகையில் காணப்படும் ஓவியங்கள் ஷெகாவாடி பிரதேசத்திலேயே தனித்தன்மை வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த திப்ரேவாலா ஹவேலி அதன் வண்ணப்பூச்சு கண்ணாடிகளால் ஆன ஜன்னல்களுக்கு பெயர்பெற்றுள்ளது. நவாப் சமக்ஷன் மக்பாரா, ஜோரவார் கர், கேத்ரி மஹால், லட்சுமி நாத் கோயில், அஜீத் சாகர் மற்றும் நவாப் ரொஹில்லா கான் மக்பாரா போன்ற இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களையும் இங்கு பயணிகள் காணலாம்.



Click it and Unblock the Notifications