நகரின் மையத்தில் இருக்கும் இந்த ஏரி நிறைய சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் முக்கியமான இடமாகும். விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்களும் இங்கு ஏராளமாக வருகிறார்கள்.
வில்லியம் வார்ட் என்ற தலைமை ஆணையரின் நினைவாக இந்த ஏரிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரசு இல்லத்தின் பகுதியாக ஒருகாலத்தில் விளங்கிய இந்த ஏரி இனிமையான வெளியுலகச் சுற்றுலாவிற்கு வழிவகுக்கிறது.
காசி கைதி ஒருவரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இவ்வேரி, பின்னர் இந்த ஏரியைச் சுற்றி கட்டிடங்கள் கட்ட காரணமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. உள்ளூர் மக்கள் இந்த ஏரியை பொலாக் என்றழைக்கின்றனர்.
ஆங்கிலேய ஆட்சியில் ஷில்லாங் நகர் இந்த ஏரியைச் சுற்றி, ஒரு அழகிய பாலத்துடன் கட்டப்பட்டது. ஏரிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் பல வகை அரிய செடிகள் கிடைக்கின்றன. கல் நடை பாதைகள், அழகிய மலர்களுடன் நிறைந்த இவ்விடம் பயணிகளை ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications