சிம்லா-பிலஸ்பூர் ரோட்டில் சிம்லாவிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தர்லகாட் வனவிலங்கு சரணாலயத்திற்கு புகழ்பெற்றது. பார்வையாளர்கள் இங்கு கருப்பு கரடிகள், சாம்பார் இன மான்கள், காட்டுப்பன்றிகள், சிவப்புக்காட்டுக்கோழிகள், குறைக்கும் மான்கள் மற்றும் பல்வேறு வகையான இடம் பெயர்ந்து வரும் பறவைகள் முதலியவற்றை பார்க்க முடியும்.
ஹிமாச்சல பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகம் இங்கு பல்வேறு சுற்றுச்சூழல் பிரயாணங்களை ஏற்பாடு செய்து வருகிறது. அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் இந்தச்சரணாலயத்தைப்பார்க்க சிறந்த நேரமாகும்.



Click it and Unblock the Notifications