Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிமோகா » ஈர்க்கும் இடங்கள் » ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயம்

ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயம், ஷிமோகா

21

ஷிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயம் கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற மாதங்களாகும்.

செழிப்பான தாவரப்பசுமையுடன் 385 ச.கி.மீ பரப்பளவில் இந்த சரணாலயம் பரந்துள்ளது. இந்த சரணாலத்தின் உள்ளேயே மனிதக்குடியிருப்புகளும் அமைந்துருப்பது ஒரு விசேஷமான அம்சமாகும்.

ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயத்தில் பல அருகி வரும் உயிரினங்கள் மற்றும் அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் வசிக்கின்றன. இவற்றில் வெண் முதுகு வல்லூறு, இந்திய நைட்ஜார் மற்றும் வெண் வயிறு டிராங்கோ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர, குள்ளநரி, புலி, யானை, சிறுத்தை, சதுப்புநில முதலை, ராஜ நாகம், கரடி, கீரி, லாங்குர் குரங்கு மற்றும் மலைப்பாம்பு போன்றவை இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.

தீர்த்தஹல்லி எனும் இடத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. ஷிமோகா ரயில் நிலையம் மற்றும் மங்களூர் விமான நிலையம் போன்றவை இந்த சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

ஷிமோகா மற்றும் சாகர் நகரங்களிலிருந்து இந்த சரணாலயத்திற்கு செல்ல பேருந்து சேவைகள் உள்ளன. பிரசித்தமான ஜோக் ஃபால்ஸ் நீர்விழ்ச்சி இந்த சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue