1228-ஆம் ஆண்டு, அஹோம் சாம்ராஜ்யத்தின் முதல் அரசர் சாவோ லுங் சியு கா பா அவர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக விளங்கிய இடம் சராய்தியோ. சிப்சாகர் நகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சராய்தியோ, அஹோம் சாம்ராஜ்யத்தின் முக்கியமான நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.
அஹோம் சாம்ராஜ்யத்தில் பல முறை தலைநகரங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், இங்கு அஹோம் ராஜ குடும்பத்தவர்களில் இடுகாடுகள் பல உள்ளன. அஹோம் மக்களில் மூதாதையக் கடவுள்களின் இடங்களும் இங்கு இருக்கின்றன.
இங்கு புதைக்கப்படும் ராஜ குடும்பத்தவர்களுக்கு, மலை போன்ற ஒரு சமாதி கட்டியிருக்கின்றனர். இந்த வடிவமைப்பு எகிப்து பிரமிடுகளைப் போல காட்சியளிக்கிறது. இது போல கிட்டதட்ட 150 சமாதிகள் சராய்தியோவில் உள்ளன.
அசாமில் இருக்கும் சுற்றுலாத்தலங்களுள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது சராய்தியோ. இங்கு கட்டப்பட்டிருக்கும் சமாதிகள், அஹோம் காலத்து சிற்பம் மற்றும் கட்டிடக் கலையை எடுத்துரைப்பதாகத் திகழ்கின்றன.
சுமார் 30 சமாதிகளை, இந்திய மற்றும் அசாம் தொல்பொருள் ஆய்வு நிறுவனங்கள் இணைந்து பராமரித்து வருகின்றன. சிப்சாகர் வரும் சுற்றூலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் சராய்தியோ.



Click it and Unblock the Notifications