சிப்சாகர் நகரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள கர்காவோன் எனும் ஊரில் அமைந்திருக்கிறது கரேங் அரண்மனை. அஹோம் சாம்ராஜ்யத்தின் முக்கியமான நகரமாக கர்காவோன் திகழ்ந்திருக்கிறது.
கரேங் கர், அஹோம் சாம்ராஜ்ய அரசர்களின் அரண்மனையாக விளங்கியிருக்கிறது. 1752-ஆம் ஆண்டு, ராஜேஸ்வர சிங்க அரசர் இந்த அடுக்கு மாடி அரண்மனையைக் கட்டினார்.
கரேங் கர் அரண்மனை 7 மாடிகள் கொண்டது. அதில் மூன்று மாடிகள், பூமிக்கு அடியில் உள்ளது போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடிகளை தளாதள் கர் என்பர்.
இதற்கு மேல் இருக்கும் மாடிகளை கரேங் கர் என்று அழைப்பர். இந்த அரண்மனை முழுவதையும் தளாதள் அரண்மனை என்பர். ஆக, கரேங் கர் என்பது தளாதள் கர் அரண்மனையின் ஒரு பகுதியாகும்.
கரேங் கர் மூன்று மாடிகளைக் கொண்டது. அதன் மேல் மாடியில் மண்டபம் போன்ற ஒரு மேற்கூறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தது. அவற்றில் இரண்டு மட்டுமே தற்போது உள்ளது. சிப்சாகர் இருந்து சாலை வழியாக 30 நிமிட பயணத்தில் கரேங் கர் வந்து சேரலாம்.



Click it and Unblock the Notifications