உம்ரங்ஸ்ஹு சில்சாரில் இருந்து சுமார் 196 கிலோமீட்டர் அமைந்துள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இது அசாம் மற்றும் மேகாலயா மாநில எல்லைகளுக்கு இடையில் அமைந்துள்ள இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
வட சச்ஹர் மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள இந்த இடம் அதன் கண்ணுக்கினிய அழகிய காட்சிகளுக்கு புகழ் பெற்றது. இது, இதற்கு கீழே உள்ள அழகிய பள்ளத்தாக்கின் கண்கவர் காட்சிகளுக்கு பிரபலமானது.
இந்த மலை வாசஸ்தலத்தின் மிகப்பெரிய சிறப்புகளில், இங்குள்ள வெந்நீர் ஊற்றுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த தண்ணீருக்கு மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த இடம் வடகிழக்கு மாநிலங்களின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டங்களின் இருப்பிடமாக விளங்குகிறது. இந்த இடத்தில் அமைந்துள்ள `கோபிலி' நதியில் கட்டப்பட்ட அணையிலிருந்து வட கிழக்கு எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NEEPCO) மின் உற்பத்தி செய்து வருகிறது.
நீங்கள் இங்கு அமைந்துள்ல ஏரியில் படகு சவாரி செய்து மலைஉச்சியில் இருந்து உங்கள் கவனத்தை கவரும் நேர்த்தியான காட்சியமைப்புகளை அனுபவிக்க முடியும்.



Click it and Unblock the Notifications