Search
  • Follow NativePlanet
Share

சிம்தேகா – பழங்குடி பாரம்பரியம்!

5

சிம்தேகா எனும் இந்த நகரம் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிம்தேகா மாவட்டத்தின் தலைநகரமாகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றி நேரில் பார்த்து தெரிந்து கொள்ள விரும்பும் பயணிகள் வரவேண்டிய இடம் இந்த  சிம்தேகா ஆகும். நகரம் போன்ற தோற்றத்துடன் சிம்தேகா காணப்பட்டாலும் இது தனது இயற்கையுடன் இயைந்த நாட்டுப்புற கலாச்சாரத்தை இழந்துவிடவில்லை.

இந்த ஸ்தலத்தில் ஆதிவாசிகள் என்றழைக்கப்படும் பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். எனவே இப்பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த மக்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்த்து புரிந்துகொள்ளவும், இப்பிரதேசத்தின் இயற்கை எழில் அம்சங்களை பார்த்து ரசிக்கும் நோக்கத்துடனும் வருகை தருகின்றனர். இங்குள்ள வனப்பகுதிகளில் கூடார வாசம் போன்ற பொழுதுபோக்குகளிலும் பயணிகள் ஈடுபடலாம்.

சிம்தேகா சுற்றுலா அம்சங்கள்

சிம்தேகா நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் கேலாக்ஹக் அணையும் ஒன்றாகும். இந்த அணைப்பகுதியை சுற்றிலும் வரிசையான மலைத்தொடர்கள் பிரமிக்க வைக்கும் அழகுடன் வீற்றிருக்கின்றன.

இது தவிர ராம்ரேக்கா தாம், தங்காடி, கெடுங்கா தாம்,பன்வார் பஹார் மற்றும் அஞ்சர் பீர் சாஹிப் எனும் இடத்தில் உள்ள மஜார் போன்ற சுற்றுலா அம்சங்களும் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன.  

சிம்தேகா வரலாற்றுப்பின்னணி

பல்வேறு வம்சங்களை சேர்ந்த ஆட்சியாளர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் ஆளப்பட்டு வந்திருக்கும் இந்த சிம்தேகா ஆழமான வரலாற்று பின்னணியையும் கொண்டுள்ளது.

சுற்றுலாவுக்கு ஏற்ற பருவம்

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான பருவம் சிம்தேகாவுக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது.

எப்படி செல்வது சிம்தேகாவுக்கு?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மற்ற எல்லா முக்கிய நகரங்களுடனும் நல்ல போக்குவரத்து வசதிகளை சிம்தேகா பெற்றுள்ளது. இந்த நகரத்துக்கு அருகில் 162 கி.மீ தூரத்தில் ராஞ்சி விமானநிலையம் அமைந்திருக்கிறது. பேருந்து மற்றும் ரயில் இணைப்பு வசதிகளும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து கிடைக்கின்றன.

சிம்தேகா சிறப்பு

சிம்தேகா வானிலை

சிறந்த காலநிலை சிம்தேகா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சிம்தேகா

  • சாலை வழியாக
    சிம்தேகா நகருக்கு அருகிலுள்ள ராஞ்சி, கும்லா, லோஹர்தாகா, சஸராம் மற்றும் ரூர்கேலா போன்ற நகரங்களிலிருந்து பெருந்து வசதிகள் கிடைப்பதால் பயணிகள் சுலபமாக இந்த சிம்தேகா நகருக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரூர்கேலா ரயில் நிலையம் (ஒரிஸ்ஸா) சிம்தேகா நகரத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு ரயில் சேவைகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிம்தேகா நகரத்துக்கு அருகில் 162 கி.மீ தூரத்தில் ராஞ்சி விமானநிலையம் அமைந்திருக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed