சிவபெருமானுக்காக எழுப்பப் பட்டுள்ள சகரேஷ்வர் எனும் புராதனமான கோயில் சகரேஷ்வர் கடற்கரையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அழகான கோயிலில் வாயிலை அரபிக்கடலின் அலைகள் தொட்டுச்செல்கின்றன.
இந்த கடற்கரை சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி கடற்கரையில் நன்கு பராமரிக்கப்பட்ட நந்தவனம் ஒன்றும் உள்ளது. கோயிலின் நுழை வாயிலில் கம்பீரமான துவஜஸ்தம்பம் மற்றும் நந்தீஸ்வரர் சிலை காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications