Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிர்ஸா » ஈர்க்கும் இடங்கள் » தாரா பாபா குடியா

தாரா பாபா குடியா, சிர்ஸா

13

தாரா பாபா குடியா என்பது ஒரு பெரிய அழகிய கோவில் வளாகமாகும். ஸ்ரீ தாரா பாபாவின் நினைவாக கட்டப்பட்ட இந்த இடம், சிர்ஸாவில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த குடியாவில் கோவில்கள், நீர்த் தேக்கம் மற்றும் சிவபெருமான் திரிசூலத்தை ஏந்தியவண்ணம் இருக்கும் உயரமான சிலை ஆகியவை உள்ளன.

நல்ல அடர்த்தியாகவும், பசுமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள மற்றும் அழகாக பராமரிக்கப்பட்டுள்ள தோட்டத்துடன், இரவில் வெள்ளி போல மின்னும் விளக்கு வசதிகளுடன் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் வளாகத்தை உருவாக்கிய தாரா பாபா 2003-ம் ஆண்டு மறைந்தார். கிருஷ்ண ஜென்மாஸ்டமி, நவராத்திரி, மகா சிவராத்திரி மற்றும் பல்வேறு திருவிழாக்களின் போது, இந்த குடியாவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

உரை நிகழ்ச்சிகள், கீர்த்தனைகள், மத உச்சாடனங்கள், ஜக்ரான்கள், சந்நியாச பஜனைகள், இசைக் கச்சேரிகள் ஆகியவை மாலை வேளைகளிலும் மற்றும் பிற தெய்வீக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.

புகழ் பெற்ற கலைஞர்களும், பாடகர்களும் இந்த விழாக்களுக்கு அழைக்கப்பட்டு, அவர்களுடைய திறமையை காட்டிச் செல்வார்கள். பாபாவின் பக்தர்களில் சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக குழுக்களின் தலைவர்களும் உள்ளனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun