அய்யனார் நீழ்வீழ்ச்சி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து விழுகிறது. சிவகாசிக்கு அருகில் இருக்கும் இராஜபாளையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது.
இங்கு ஒரு அய்யனார் ஆலயமும் உள்ளது. இந்த அய்யனார் நீர்வீழ்ச்சி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். மலையிலிருக்கும் காடுகள் வழியாக வந்து 15 அடி உயரத்திலிருந்து இந்த அய்யனார் நீர்வீழ்ச்சி விழுகிறது. அதுபோல் இங்கிருக்கும் காடுகளின் இயற்கை காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.