இது 1672ல் கட்டப்பட்ட சமாதி மண்டபமாகும். முன்னர் இது அலி ரோஸா என்று அழைக்கப்பட்டது. இருப்பினும் ஷா நவாப் இந்த பகுதியை கைப்பற்றிய பிறகு அவர் இதற்கு பரா கமன் என்று தற்சமயம் அழைக்கப்படும் இந்த புதிய பெயருக்கு மாற்றினார். அவரது ஆட்சியில்12 வது நினைவுச்சின்னம் இது என்னும் பொருள் தரும்படியாக அவர் இந்த பெயரை வைத்துள்ளார்.
இந்த பரா கமன் சமாதி மண்டபம் ஏழு அலங்கார வளைவுகளை கொண்டுள்ளது. உள்ளே உள்ள சமாதி பீடத்தில் மன்னர் அலி மற்றும் அவரது அந்தப்புர ராணிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன.
இங்குள்ள ஜும்மா மசூதி, ஜல் மன்ஸில் மற்றும் சத் மஸில் போன்ற இன்னபிற நினைவுச்சின்ன ங்களும் மறக்காமல் பார்க்க வேண்டியவையாகும்.
நௌஸர் இலாவியா’வின் ஞாபகார்த்தமாக எழுப்ப்ப் பட்டுள்ள ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய பழமையை கொண்ட இலாவியா மாளிகை இங்கு அருகில் உள்ளது. இதுவும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications