Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » பகவந்த் கோயில்

பகவந்த் கோயில், சோலாப்பூர்

31

சோலாப்பூர் மாவட்டத்தில் ஒரு தாலுக்கா தலைநகராக விளங்கும் பர்ஷி எனும் நகரத்தில் இந்த பஹவந்த் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே பஹவந்த் என்ற பெயரில் உள்ள விஷ்ணுக் கடவுளுக்கான கோயில் இங்கு மட்டுமே உள்ளது.

மிகப்புராதனமான இந்தக் கோயில் 1245ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில் அக்காலகட்டத்தில் இப்பகுதியில் பரவலாக பின்பற்றப்பட்ட  ஹேமந்த்பந்தி கட்டிடக்கலை பாணி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக்கோயிலில் பிரத்யேக அம்சமாக நான்கு புறமும் கதவுடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளன. இருப்பினும் பிரதான வாசல் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.

விஷ்ணுக்கடவுளுக்கான  மூல விக்கிரகம் கருங்கல்லால் அமைக்கப்பட்டதாக கையில் சக்கரம், கதாயுதம் மற்றும் சங்குடன் காணப்படுகிறது. இங்கு லஷ்மி தேவியின் சிலை மற்றும் சிவலிங்கம் போன்றவையும் காணப்படுகின்றன. பிருகு மகரிஷியின் பாதச்சுவடுகளும் இங்கு உள்ளன.

இங்கு தூப ஆரத்தி, ககட ஆரத்தி மற்றும் மஹாபூஜை தூப ஆரத்தி போன்ற பூஜைகள் தினமும் நடத்தப்படுகின்றன. ஆஷாதி மற்றும் கார்த்திகை ஏகாதசி போன்ற முக்கிய திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed